• May 09 2024

'ஈரமான ரோஜாவே' சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை..? புகைப்படத்துடன் வெளிவந்த உண்மை..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சீரியலிற்குப் பேர் போன தொலைக்காட்சி என்றால் அது விஜய் டிவி. இதில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியலிற்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. அவ்வாறான தொடர்களின் ஒன்று தான் 'ஈரமான ரோஜாவே'. 


அந்தவகையில் சில வருடங்களுக்கு முன்னர் ஒளிபரப்பான 'ஈரமான ரோஜாவே' முதல் பாகம் வெற்றி ஈட்டியதைத் தொடர்ந்து அதே பெயரில் 2ம் பாகம் தொடங்கப்பட்டது. முதல் பாகத்தை போலவே இதிலும் திருமணம் செய்யப்போகும் ஜோடி மாற்றப்பட்டு அதை வைத்தே கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் இந்த சீரியலில் பிரியா வேடத்தில் நடிக்கும் ஸ்வாதி தொடரில் இருந்து விலகுவதாக கூறப்பட்டது. ஆனால் அந்த செய்திகளில் எந்த வித உண்மையும் இல்லையாம், அது எல்லாம் வதந்தி எனக் கூறப்படுகின்றது.


அந்தவகையில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவர் தன்னுடன் நடிக்கும் திரவியமுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதன் மூலமாக அவர் இந்த சீரியலில் இருந்து விலகவில்லை என்பது உறுதியாகி உள்ளது.


Advertisement

Advertisement

Advertisement