• May 19 2024

AK61 படத்தின் டைட்டில் இது தானா -வெளியானது தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தான் நடிகர் அஜித்.இவர் தற்போது இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் AK61 திரைப்படத்தில் நடித்து வந்தார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வங்கி கொள்ளை குறித்த திரைப்படமாக இருக்குமென கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தை தொடர்ந்து அஜித் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவரின் 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது.

இந்நிலையில் AK61 குறித்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஆம், அதன்படி AK61 படத்தின் டைட்டில் வல்லமை என சொல்லப்படுகிறது.

ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான வலிமை போலவே இப்படத்தின் டைட்டில் உள்ளது. அத்தோடு இது எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை இது குறித்து அதிகாரபூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement