• Jan 18 2025

சமூக வலைத்தளம் மொத்தமும் பற்றி எரிய வைத்த "கங்குவா" படத்தின் பயர் சாங் !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர் வரிசையில் இடம்பிடித்திருக்கும் நடிகர் சூர்யாவின் வெளிவர இருக்கும் திரைப்படமான "கங்குவா" திரைப்படத்தின் நெருப்பு பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி வெளியானது.வெளியாகி சிலமணி நேரங்களிலேயே 500k பார்வையாளர்களை தாண்டி பெரு நெருப்பை பற்ற வைத்துள்ளது இப் பாடல்.

Kanguva's 'Fire Song': Suriya is fierce ...

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வெளியாகி ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுக்க இன்று வெளியான பாடலின் சிறு காட்சியில் சூர்யாவின் மிரட்டலான லுக் மற்றும் டான்ஸ் ரசிகர்களுக்கு போனஸ் கிப்ட்டாகவே ஆனது.

Kanguva Fire Song Archives ...

வருகிற அக்டோபர்  மாதம் 10 திகதி உலக அளவில் வெளியாகவிருக்கும் "கங்குவா" திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இந்த ஒற்றை பாட்டின் மூலம் பத்து மடங்கு அதிகரித்துள்ளது எனலாம்.தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வெளியாகியிருக்கும் பயர் சாங் பெரும் உணர்ச்சி பெருக்கை ஏற்படுத்தும் வகையில்  வரிகளை கொண்டுள்ளது பாடலுக்கு மேலுமொரு ப்ளஸ். 

Advertisement

Advertisement