• May 18 2024

தொடர்ந்து பின்தள்ளப்படும் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு- அடடே இது தான் காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு தான் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றார்கள் எனலாம். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் வசூலில் அள்ளிக் குவித்து விடும் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய பீஸ்ட் படமும் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக் குவித்தது.

இதனை எல்லாம் பொருட்படுத்தாது விஜய் தற்பொழுது தனது 66வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு வாரிசு என்று பெயரிடப்பட்டுள்ளது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகின்றது.

இந்நிலையில் விஜய்யின் அடுத்தடுத்த படங்களை இயக்கப்போகும் இயக்குநர்கள் பற்றிய தகவலும் வெளியாகி வருகிறது. விஜய் 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்நிலையில் இந்த படத்தில் திரைக்கதை உருவாக்கத்தில் மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குநர் ரத்னகுமார் பங்களிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்துக்கான திரைக்கதை வேலைகளை இயக்குநர் லோகேஷ் தன் குழுவோடு தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அக்டோபர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட படப்பிடிப்பு டிசம்பருக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகை குறைவைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement