• Jan 19 2025

சிறகடிக்க சீரியல் 'பியூட்டிஸ் அண்ட் ஆண்டிஸ்' செய்த ரகளைகள்! பூமர் விஜயாவை கழட்டிவிட்ட தரமான சம்பவம்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் காணப்படுகிறது.

சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது விறுவிறுப்பாக செல்கிறது. அதற்கு காரணம் முத்துவை சுற்றி நடக்கும் சூழ்ச்சி, ரோகிணி செய்யும் கேடி வேலைகள், ஸ்ருதியின் பெற்றோர் தீட்டும் சதி திட்டம் என்பன தான்.

இந்த சீரியலில் உள்ள கதாபாத்திரங்களும் சாதாரண வாழ்க்கைக்கு ஏற்ப, அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள், சந்தோஷங்கள், திருப்பங்கள், தந்திரங்கள் என விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகர்கிறது.


இந்த சீரியலில் தற்போது ஸ்ருதி, ரோகிணிக்கு தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷன் நல்லபடியாக பிரச்சனை இன்றி நடந்து முடிந்துள்ளது. ரோகினிக்கும் தாலி பிரித்து கோர்க்க ஏற்பாடு செய்த விஜயா, அதற்கு கட்டாயமாக ரோகிணியின் அப்பா வரவேண்டும் என கண்டிஷன் போட்டு இருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. இதனால் ரோகிணியை திட்டி தீர்க்கிறார்.


மறுபக்கம் இந்த பங்ஷன் நடந்து முடிவதற்குள் முத்துவை வைத்து பிரச்சினை பண்ணி ஸ்ருதி, ரவியை அவர் குடும்பத்தில் இருந்து  பிரித்து நம்முடன் கூட்டிப் போக வேண்டும் என்ற நோக்கில் ஸ்ருதியின் அம்மா, அப்பா சதி செய்கிறார்கள். ஆனாலும் அதுவும் நடந்த பாடில்லை. இனி வரும் நாட்களில் முத்து பிரச்சினை செய்வாரா என பார்ப்போம்.

இந்த நிலையில், தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் பெண் நடிகைகள் ரீல்ஸ் செய்து வெளியிட்டு உள்ளார்கள். ஆனாலும் இதில் விஜயாவை மட்டும் காணவில்லை.

அதில் பார்வதி, சுதா ஒருபக்கமும், மீனா, ரோகிணி, ஸ்ருதி இன்னொரு பக்கமும் டான்ஸ் ஆடி வெளியிட்டு உள்ளார்கள். இவை தற்போது வைரலாகி உள்ளன. இதோ அந்த வீடியோக்கள்.





Advertisement

Advertisement