• May 12 2024

பல கோடிக்கு விற்கப்பட்ட 'ஜவான்' படத்தின் சாட்டிலைட் உரிமம்... அடேங்கப்பா நம்பவே முடியல..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

விஜய்யின் 'பிகில்' படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜவான்'. இப்படத்தில் ஹீரோவாக ஷாருக்கான் நடித்து வருகிறார். அத்தோடு நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.


அதுமட்டுமல்லாது தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். அந்தவகையில் இந்தி, தமிழ், தெலுங்கு எனப் பல மொழிகளில் இப்படம் உருவாகிறது.

சமீபகாலமாக பாலிவுட் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்துகொண்டிருக்கும் நிலையில் ‘ஜவான்’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனையடுத்து ‘ஜவான்’ படம் செப்டெம்பர் 07-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


இந்நிலையில் இப்படமானது ரிலீஸாவதற்கு முன்னரே பல கோடி வசூலை வாரிக் குவித்து வருகின்றது. அதாவது ப்ரீ பிசினஸில் பல 100 கோடியை வசூல் செய்திருக்கும் அதேநேரத்தில் சாட்டிலைட் ரைட்ஸ் ரூ. 85 கோடிக்கும் மேல் விற்பனை ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது. அந்தவகையில் ஜவான் படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ டிவி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இவ்வாறாக ரிலீஸிற்கு முன்பாக மாஸ் காட்டி வரும் ஜவான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement