• May 08 2024

விஜயகாந்த் உணவு உண்ணும் போது தட்டைப் பிடுங்கிய நபர்... இந்தநிலைக்கு காரணமே அந்த சம்பவம் தானாம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காலத்திற்கு காலம் பல்வேறு நடிகர் நடிகைகளும் தோன்றிய வண்ணம் தான் இருக்கின்றார்கள். இவர்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும் தமக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ள பல நடிகர்கள் இரும் சினிமாவில் இருக்கின்றனர். 

அப்படியான வரிசையில் மிகவும் முக்கியமானவ ஒருவர் தான் நடிகர் மீசை ராஜேந்திரன். இவர் தமிழில் வில்லன் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பல ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர்.


இவர் தற்பொழுதும் ஒரு சில திரைப்படங்களில் நடித்த வண்ணமே தான் இருக்கின்றார். அதிலும் குறிப்பாக நடிகர் விஜயகாந்துக்கும் இவருக்கும் பல ஆண்டுகாலமாகவே ஒரு நல்லுறவு இருக்கின்றது. அதாவது சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி விஜயகாந்துடன் தொடர்ந்து பயணிப்பவர் நடிகர் மீசை ராஜேந்திரன் விளங்கி வருகின்றார்.

இவர் விஜயகாந்த் அவர்களைப் பற்றி பல பேட்டிகளில் மிகவும் விரிவாக பேசி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றிலும் விஜயகாந்த் குறித்து மிகவும் உருக்கமாக பேசியிருக்கின்றார். அதாவது அப்பேட்டியில் விஜயகாந்த் இயக்கிய படத்தில் தான் நடித்த அனுபவத்தை கூறியுள்ளார்.

விஜயகாந்த் உணவு உபசரிப்பில் சிறந்து விளங்குகின்ற ஒருவர். இவ்வாறு நன்னடத்தையுடன், மரியாதை நிறைந்தவராக இருப்பதற்கு காரணம் அவரின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் இடம்பெற்ற சம்பவம் தான் எனக் கூறியிருக்கின்றார்.


இது தொடர்பாக மீசை ராஜேந்திரன் மேலும் கூறுகையில், "விஜயகாந்த் ஆரம்பத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தபோது ஒரு படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக வேலை செய்து கொண்டிருந்தார். அவர் உணவு இடைவேளையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அந்தப் படத்தின் கதாநாயகன் ஷாட்டுக்கு ரெடியாகி வந்துவிட்டதால் அவருடன் நடிக்க வேண்டிய விஜயகாந்த் சாப்பிட்டுக் கொண்டிருந்தமையினால் அவரது தட்டை பிடுங்கிவிட்டு நடிக்க அழைத்தார்கள்" எனத் தெரிவித்திருந்தார். 

அப்போது இடம்பெற்ற இந்த சம்பவத்தினால் தான் ஒரு நடிகனானால் உணவு பிரச்சினை யாருக்கும் இருக்கக்கூடாது என்பதை விஜயகாந்த் முடிவு செய்தாராம். அன்றிலிருந்து இன்றுவரை அதையே கடைப்பிடித்தும் வருகின்றாராம். 

இவ்வாறாக இப்போது அனைவரும் விஜயகாந்தின் உணவு உபசரிப்பை பற்றி பாராட்டுவதற்கு அதுதான் ஆரம்பப் புள்ளியாக இருந்துள்ளதாக கூறியிருக்கின்றார் நடிகர் மீசை ராஜேந்திரன்.

Advertisement

Advertisement

Advertisement