• Apr 01 2023

'குக்வித் கோமாளி'யில் இருந்து மணிமேகலை திடீரென வெளியேறியது எதனால்..? லீக்கானது உண்மைக் காரணம்..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

நிகழ்ச்சி தொகுப்பாளர், போட்டியாளர், யூட்யூப் சேனல், சமூக வலைத்தளம் எனப் பன்முகத் திறமை கொண்டு எப்போதும் பிசியாக இருக்கும் மணிமேகலை சில வாரங்களுக்கு முன்பு ஆரம்பமான 'குக்வித் கோமாளி' சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார். 


இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நேற்றைய தினம் திடீரென அறிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.  அதாவது 'கடினமான முடிவு தான். ஆனால் எடுத்தாகவேண்டிய நிலை" என அவர் கூறி இருக்கிறார்.


மேலும் நேற்றைய எபிசோட்டில் கூட ஜாலியாக அனைவரையும் கிண்டலடித்துக் கொண்டு இருந்த மணிமேகலை திடீரென அந்நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு செய்தது ஏன் என்பது தான் பல ரசிகர்களது  கேள்வியாகவும் உள்ளது. மணிமேகலையும் அந்நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கான உண்மைக் காரணத்தை வெளிப்படையாக சொல்லவில்லை.

இந்நிலையில் அவர் விலகலுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. சிலர் அவர் கர்ப்பமாக இருப்பதன் காரணமாகத் தான் இந்நிகழ்ச்சியில் இருந்து விலகியதாக கூறி வருகின்றனர். ஆனால் அது வெறும் வதந்தி என்பது தற்போது தெரியவந்துள்ளது.


மறுபுறம் அவருக்கும், குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தான் மணிமேகலை விலகியதாக கூறப்படுகிறது. மணிமேகலையில் பதிவும் அதனை சற்று சூசகமாக உறுதிப்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனெனில் மணிமேகலை தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து நேற்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பதிவில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களின் பெயர்களை குறிப்பிடவே இல்லை. அதுமட்டுமல்லாது அவர்களுக்கு நன்றி என்றும் ஒரு இடத்தில் கூட பதிவிட வில்லை. 


மேலும் மணிமேகலையில் இந்த பதிவுக்கு அந்நிகழ்ச்சியின் இயக்குநர் பார்த்திவ் மணி ரிப்ளை செய்திருந்தார். அதற்கு மணியும் நன்றி என மட்டுமே பதில் அளித்திருந்தார். இதன்மூலம் அந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களுடன் ஏற்பட்ட மோதலே மணிமேகலையின் இந்த அதிரடி முடிவுக்கு முக்கிய காரணம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement