• May 18 2024

திடீரென ரத்து செய்யப்பட்ட லியோ படத்தின் பிரீமியர் காட்சி- கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்

stella / 7 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், சஞ்சய் தத், மிஷ்கின் உள்ளிட்டவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ளது லியோ. இந்தப் படத்தை மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை, தலக்கோணம் ஆகிய இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

 இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. படவெளியாக இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். அதே போல, விஜய், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் தவிர, அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.


இந்நிலையில் நடிகர் விஜய்க்கு தமிழ் நாட்டை தாண்டி அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ரசிகர்கள் அதிகம். அதனால் லியோ படம் வெளியாக 6 நாட்கள் இருக்கும் முன்பே முன்பதிவு தொடங்கிவிட்டது.


தற்போது லியோ படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அமெரிக்காவில் லியோ படத்தின் IMAX பிரீமியர் காட்சிகள் ரத்து செய்யபட்டதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  


Advertisement

Advertisement