• Dec 07 2022

நடிகர் அஜித்தை ஆசிர்வதித்த வயதான பெண்மணி.. நெகிழ்ச்சியான வீடியோ இதோ..!

Listen News!
Aishu / 1 month ago
image
Listen News!

இந்திய சினிமாவில் நடிகர் அஜித்திற்க்கு என்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. பல இளைஞர்களுக்கு நடிகர் அஜித் ஆதர்ச நாயகனாக இருக்கிறார். சமூக வலைதளங்களான பேஸ்புக்,டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்குகள் எதுவும் இவருக்கு  இதுவரை கிடையாது. சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கியே இன்று வரை இருந்து வருகிறார். ரசிகர்களின் ரசிகர் மன்ற கணக்குகளே சமூக வலைதளங்களில் இருந்து வருகின்றன.

எனினும் சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளிவந்தது. அத்தோடு வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

வலிமை படத்திற்கு பின்னர்  அஜித், துணிவு படத்தில் நடித்து வருகின்றார்.மேலும்  இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த  படத்திலும் நடித்து வருகின்றார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

அத்தோடு இந்த படத்தின் ஒளிப்பதிவை நீரவ் ஷா கவனிக்கிறார். கலை இயக்குநராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  மேலும் இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

அத்தோடு துணிவு படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நவம்பர் மாதம் முதல் வாரம் துவங்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறுஇருக்கையில்  விமான நிலையத்தில் நடிகர் அஜித் குமார், வீல் சேரில் அமர்ந்து இருக்கும் வயதான பெண்மணி மற்றும் மாற்றுத்திறனாளி ரசிகரை சந்தித்த வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

பெண்மணி அருகில் சென்று நடிகர் அஜித் புகைப்படம் எடுத்து கொண்டு வரும் போது, அந்த பெண்மணி நடிகர் அஜித்தின் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்யும் வீடியோ காட்சிகள் காணும் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.மேலும்  இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.