தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழும் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு எனும் திரைப்படத்தில் நடித்துக்கொண்டு இருக்கின்றார்.
இதனைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார்.இவர் கடந்த 2020ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் முற்றலும் மாறுபட்ட ஒரு விஜய்யை, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் காட்டியிருந்தார்.
மேலும் இப்படம் மாபெரும் வெற்றியை பெற்று வசூலில் பல சாதனைகளையும் படைத்தது. மாஸ்டர் வெற்றிக்குபின் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் மீண்டும் எப்போது இணைவார்கள் என்று ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
அந்தவகையில் தளபதி 67 விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் LCU-வாக இருக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் 7 ஸ்க்ரீனிடம் இருக்கும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகுமென குறிப்பிடப்படுகின்றது.
அத்தோடு, இப்படத்தில் கதாநாயகியாக சமந்தா கமிட்டாகியுள்ளார் என்று சில நாட்களுக்கு முன் செய்தி வெளிவந்தது. இந்நிலையில், தற்போது இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கப்போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே லோகேஷ் - விஜய் கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர் படத்திற்கு அனிருத் தான், இசையமைத்திருந்தார். மேலும் சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படத்திற்கு அனிருத் தான் இசையமைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!