• May 08 2024

பிரபாஸ் நடிக்கும் 'சலார்' திரைப்படத்தின் புதிய போஸ்டர்... வில்லனாக மிரட்டும் பிருத்விராஜ்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபாஸ். ராஜமவுலி இயக்கத்தில் இவர் நடித்த 'பாகுபலி' திரைப்படமானது பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி இவரின் புகழை உலகம் முழுவதும் பரப்பியது.

இதையடுத்து சினிமா உலகில் பிரபாஸின் மார்க்கெட்டும் அசுர வளர்ச்சி கண்டது. அவர் நடிக்கும் படங்கள் அனைத்தையும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் பான் இந்தியா படமாகவும் வெளியிட்டனர்.


அந்த வகையில் பாகுபலி படத்தின் வெற்றிக்கு பின்னர் இவரின் நடிப்பில் வெளியான 'சாஹோ' மற்றும் 'ராதே ஷ்யாம்' ஆகிய படங்கள் வெளியாகின. இருப்பினும் இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்தன.

அதிலும் குறிப்பாக அவர் நடித்த 'ராதே ஷ்யாம்' திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டத்தை சந்தித்து தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து பிரபாஸ் நடிப்பில் தற்போது வெளியாக இருக்கும் படம் 'ஆதிபுருஷ்'. ராமாயணக் கதையை மையமாக வைத்து தயாராகி வரும் இப்படத்தில் பிரபாஸ் ராமராகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும், சையிப் அலி கான் ராவணனாகவும் நடித்துள்ளனர். ஓம் ராவத் இயக்கியுள்ள இப்படமானது அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது.


இந்நிலையில் பிரபாஸின் அடுத்தாக பிரபாஸ்  ரசிகர்கள் அனைவரலாலும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் 'சலார்'. இப்படத்தினை கே.ஜி.எப் திரைப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கி வருவதால் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்புக் கிளம்பியிருக்கின்றது.


அந்தவகையில் தற்போது சலார் திரைப்படத்தின் போஸ்டரும் வெளியாகியிருக்கிறது. அதாவது இன்று நடிகர் பிரித்விராஜின் பிறந்தநாள் என்பதால் அப்படத்தின் வில்லனாக நடித்துள்ள அவரின் புகைப்படத்தை இட்டு போஸ்டரை வெளியிட்டு இருக்கின்றனர் படக்குழுவினர்.


Advertisement

Advertisement

Advertisement