• May 19 2024

ஜெயிலர் படத்தில் இணைந்த பீஸ்ட் படத்தின் முக்கிய பெண் பிரபலம்- அப்போ அதெல்லாம் சூப்பராக இருக்கும்

stella / 1 year ago

Advertisement

Listen News!


கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய இயக்குநர் தான் நெல்சன் திலீப் குமார். இவர் இதனைத் தொடர்ந்து ரஜினியின் 167 வது படத்தை இயக்கி வருகின்றார்.இப்படத்திற்கு ஜெயிலர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  என்பன வெளியாகி இருந்தது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் சென்னையில் ஆரம்பமாகி  உள்ளது. இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். 



இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் தனது கர்ப்ப காலத்தில் நடத்திய போட்டோஷூட் குறித்து பதிவிட்டுள்ளார். அந்த போட்டோ ஷூட்டில் ஸ்டைலிஸ்டாக பல்லவி சிங் பணிபுரிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 


மேலும் பல்லவி சிங் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.இதன் மூலம் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் ஆக பல்லவி சிங் பணிபுரிவது உறுதியாகி உள்ளது. பல்லவி சிங் ஏற்கனவே பீஸ்ட் படத்தில் பணிபுரிந்தவர் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement