தமிழ் சினிமாவில் குறும்படங்கள் நடிப்பதன் மூலம் பிரபல்யமானவர் தான் அம்ரிதா ஐயர். இவர் இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிகில் திரைப்படத்தில தென்றல் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமானார்.
இப்படத்தில் இவர் கால்பந்து வீராங்கனையாக நடித்திருந்தார்.இப்படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து நடிகர் கவின் உடன் இணைந்து லிப்ட் என்னும் படத்தில் நடித்திருந்தார். இப்படம் இவருக்கு நல்லதொரு வரவேற்பையும் பெற்றுக் கொடுத்தது.
இந்த நிலையில் தற்போது அம்ரிதா தமிழ், தெலுங்கில் சில படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் அமிர்தாவுக்கு அங்கு 1.9 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.தொடர்ந்த தனது லேட்டஸ்டான போட்டோக்களை பதிவிட்டும் வருகின்றார்.
இந்நிலையில் அம்ரிதா திடீரென திருமண கோலத்தில் இருக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட, அவருக்கு நிஜத்தில் திருமணம் முடிந்துவிட்டதோ என அனைவரும் நினைத்துவிட்டனர்.
"No no it’s not my marriage pictures!!" என அவரே அதற்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார். அது உண்மையில் வணக்கம்டா மாப்ள என்ற படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த ஸ்டில் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!