• Jan 19 2025

"மணிரத்னம் இயக்குனர் ஆக நானும் ஒரு காரணம்" என்றார் மைக் மோகன் !

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா தாண்டி பிற இந்திய மொழி சினிமாக்கள் மற்றும் உலக அளவில் பிரபலமானவர் இயக்குனர் மணிரத்னம்.திரைப்பட இயக்குனர் தாண்டி திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பல்முகங்களை கொண்ட திறமையாளன்


இந்தியாவின் மிகவும் பாராட்டப்பட்ட மற்றும் வணிக ரீதியாக வெற்றிகரமான திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவர். ஆறு தேசிய திரைப்பட விருதுகள் , நான்கு ஃபிலிம்பேர் விருதுகள் , ஆறு பிலிம்பேர் விருதுகள் தெற்கு , மற்றும் 2002 ஆம் ஆண்டில், இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.


அண்மையில் பிரபல யூ ரூயூப் தளமொன்றில் சுஹாசினி மணிரத்னம் அவர்கள் தொன்னூறுகளின் நாயகன் மைக் மோகன் என அறியப்படும் நடிகர் மோகன் உடனான சுவாரசியமான பல விடையங்களை பேசிய நேர்காணல் ஒன்றில் பங்கேற்றிருந்தார்.பல்வேறு விஷயங்கள் பற்றி உரையாடி இருக்கும் அப்பேட்டியில் மணிரத்னம் இயக்குனர் ஆக தானும் ஒரு காரணம் என மோகன் கூறி இருக்கிறார்.


Advertisement

Advertisement