• Apr 27 2024

நடந்த உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவான 'ஜப்பான்'...கார்த்தியின் ஹாரக்டர் இது தானா? விரைவில் மாஸ் அப்டேட்..!

Jo / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் கார்த்தி தற்போது ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார். ராஜூ முருகன் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் சென்னை EVP பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு எடுக்கப்பட்டு வருகிறது. கார்த்தியுடன் அனு இம்மானுவேல் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜப்பான் படத்தின் மினி டீசரை படக்குழு வெளியிட்டது. அதில், ஜப்பான் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் எனவும் படக்குழு அறிவித்திருந்தது. முக்கியமாக ஜப்பான் ரிலீஸ் தேதி டீசரில் கார்த்தியின் கேரக்டர் என்னவென்பது தெளிவாக தெரிந்தது. ஹீரோ, காமெடியன், வில்லன் என கார்த்தியின் கேரக்டரை மற்ற கேரக்டர்கள் பேசுவதாக காட்டப்பட்டிருந்தது.

மேலும், கார்த்தி ஒரு கொள்ளை கூட்டத்தின் தலைவனாக நடித்திருப்பதும் உறுதியானது. அதேபோல், ஜப்பான் படத்தின் போஸ்டர், டீசர் போன்றவை கோல்டன் கலரில் பின்னணியில் உருவாகியிருந்தது. இதனால், ஜப்பான் படத்தின் கதைக்களம் தங்க நகை கொள்ளையடிப்பதாக இருக்கும் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் கார்த்தியின் ஜப்பான் படம் லலிதா ஜீவல்லர் கொள்ளைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து உருவாகவுள்ளதாம்.

இந்தச் சம்பவத்தால் பிரபலமான முருகன் என்பவரின் ஹாரக்டரில் தான் கார்த்தி நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் படத்திற்காக கதையிலும் கார்த்தியின் கேரக்டரிலும் சில மாற்றங்கள் செய்யலாம் என ராஜூ முருகன் கூறினாராம். ஆனால், அதனை மறுத்துவிட்ட கார்த்தி முருகனின் ஹாரக்டரில் எந்த மாற்றமும் வேண்டாம், முடிந்தவரை உண்மையான கதை பின்னணியில் எதுவும் சேஞ்ச் வேண்டாம் எனக் கூறிவிட்டாராம்.

இதனால், ஜப்பான் படத்தில் பல தரமான சம்பவங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், லலிதா ஜீவல்லரி கொள்ளையை போல, இன்னும் பல சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் முருகன். அதனால், அதுகுறித்தும் ஜப்பான் படத்தில் சில காட்சிகள் இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் விரைவில் ஜப்பான் படத்தின் டீசர் அல்லது ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என படக்குழு தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.



Advertisement

Advertisement

Advertisement