• May 19 2024

பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் திடீரென புகுந்த வருமான வரித்துறை -தமிழ் திரைப்பட வட்டாரங்களில் பரபரப்பு

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் நடிகருக்கு இருக்கும் மதிப்பு தற்போது பைனான்சியருக்கும் உண்டு.அந்தவகையில் மதுரையைச் சேர்ந்த அன்புசெழியன் சினிமா பைனான்சியராக உள்ளார்.

மேலும் இவர் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளராகவும் உள்ளார். இவர் திரைப்படங்களை தயாரிப்பது, ரிலீசாகும் படத்தை வாங்கி விநியோகிப்பது மற்றும் திரைப்படத்திற்கு பைனான்சியராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள திரைப்பட பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தோடு மதுரையில் 30 இடங்களிலும், சென்னையில் 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் கசிந்துள்ளது. திடீரென சினிமா பைனான்சியர் வீட்டில் வருமான வருத்துறை சோனை நடத்தி வருவது தமிழ் திரைப்பட உலகிலும், அரசியலிலும் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

இதற்கு முன் அன்புச்செழியன் வீடு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த 2020 ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடந்தது. அத்தோடு 77 கோடி ரூபாய் ரொக்கப்பணம், 300 கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

பிகில் பட சம்பந்தப்பட்ட ரெய்டு நடந்த நிலையில் அதன் விநியோகஸ்தராக இருந்த இவரது வீடு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. சம்மன் அனுப்பி விசாரித்தனர். அன்புச்செழியன் வருமான வரித்துறை வரி ஏய்ப்பு செய்ததை உறுதிப்படுத்தியது.

2003 சசிகுமார் உறவினர் மரணத்தை அடுத்து சென்னை போலீஸார் அன்புச்செழியனின் தி.நகர் ராகவய்யா அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

எனினும் இதுவரை 3 முறை அவரது அலுவலகத்தில் சோதனை நடந்துள்ளது. தற்போது சென்னையில் நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள வீடு, தி.நகர் ராகவய்யா தெருவில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 40 இடங்களில் ரெய்டு நடக்கிறது. சென்னை மதுரை,தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மதுரை மேல மாசி அலுவலகம், கீரைத்துறை, தெப்பக்குளம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement