• May 12 2024

ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்ற வாரிசு பட நடிகர்- வைரலாகும் புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சரத்குமார். இவர் நடிகர் மட்டுமல்லாது ஒரு சிறந்த அரசியல் வாதியாகவும் இருக்கின்றார். இவர் 1986-ஆம் ஆண்டே தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் "சூரியன்" என்ற படத்தின் மூலமாகவே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரானார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் சரத்குமார் 130-இற்கும் அதிகமான பல படங்களில் நடித்து பல விருதுகளையும் பெற்றிருக்கின்றார். இந்நிலையில் ஐக்கிய அமீரகம் இத்தியாவின் திரையுலகத்தை சேர்ந்த பலருக்கும் கோல்டன் விசா வழங்கி கெளரவித்து வருகின்றது. இதில் பாலிவுட் பிரபலங்களான சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி, ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

இவர்கள் மட்டுமல்லாது தென்னிந்தியாவை சேர்ந்த மம்முட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா உட்படப் பலருக்கும் இந்த கோல்டன் விசா வழங்கப் பட்டிருக்கின்றது.

மேலும் விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு, மீனா போன்றோரும் இவ் விசாவை பெற்றிருக்கின்றார்கள். இந்நிலையில் தற்போது நடிகர் சரத்குமாருக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசாவை வழங்கியுள்ளது.

இந்த கோல்டன் விசாவின் மகத்துவம் என்னவெனில் அந்த விசாவை வைத்திருப்பவர் 10-ஆண்டுகள் அந்த நாட்டின் குடிமகனாகவே கருதப்படுவார்.

இந்நிலையில் நடிகர் சரத்குமார் கோல்டன் விசாவை பெற்றுக் கொள்ளும் அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement