• Apr 27 2024

விஜய் ஆண்டனியின் ''பிச்சைக்காரன் 2'' படத்தின் முதல் பாடல் ''பிக்கிலி '' - ட்ரண்டாகும் வீடியோ பாடல் இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக தனக்கென தனி ஸ்டைலில் பல வைரல் ஹிட் பாடல்களை கொடுத்தவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. குறிப்பாக நாக்க முக்க பாடலுக்குப் பிறகு மிகப்பெரிய உச்சம் தொட்ட விஜய் ஆண்டனி அந்த ரகத்தில் கொடுத்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு ஆல் டைம் ஹிட் பாடல்களாக இருக்கின்றன. 

முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்த விஜய் ஆண்டனி அவர்கள் நான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கினார். தொடர்ந்து “சலீம்”, “இந்தியா பாகிஸ்தான்”, “பிச்சைக்காரன்”, “சைத்தான்”, “எமன்”, “காளி”, “திமிரு புடிச்சவன்”, “கொலைகாரன்” என விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. 

இதனிடையே தற்போது இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ள விஜய் ஆண்டனி தனது சூப்பர் ஹிட் திரைப்படமான பிச்சைக்காரன் 2 படத்தின் இரண்டாவது பாகமாக தற்போது தயாராகி வரும் பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி நடித்து வருகிறார். 

 இந்தக் கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியீடாக பிச்சைக்காரன் 2 திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. 

முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலேசியாவில் நடைபெற்ற பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது பயங்கர விபத்துக்குள்ளான விஜய் ஆண்டனி பலத்த காயம் அடைந்தார். 

தற்போது காயங்களிலிருந்து விஜய் ஆண்டனி மீண்டு வருகிறார். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் ஆரம்பகட்ட அறிவிப்பில் இருந்தே குறிப்பிடப்படும் ஆன்டி பிக்கிலி என்பது என்ன? அது யார்? என்ற ரசிகர்களின் கேள்விகளுக்கு சமீபத்தில் விஜய் ஆண்டனி, “நான் தான் ஆன்டி பிக்கிலி” என தெரிவித்திருந்தார். 

எனவே பிக்கிலி யார்? என்ற கேள்வி அடுத்து கிளம்பியது. இந்நிலையில் இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் பிக்கிலி பாடலை விஜய் ஆண்டனி தற்போது வெளியிட்டுள்ளார். இணையத்தில்  ட்ரெண்டாகி வரும் பிக்கிலி வீடியோ பாடல் இதோ!


Advertisement

Advertisement

Advertisement