• Apr 20 2024

காமெடி நடிகர் ஜார்ஜின் மகனும் ஹீரோவா...? இணையத்தில் திடீரென வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நகைச்சுவை நடிகராக விளங்குபவர் தான் ஜார்ஜ் மரியன். இவர் மேடை நாடகங்களின் மூலம் தான் தன்னுடைய திரையுலக பயணத்தை ஆரம்பித்தார். பின் இயக்குநர் சுந்தர் சி. எ ஏஎல். விஜய், பிரியதர்ஷன் போன்ற இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றி இருந்தார்.

அதற்குப் பின்னர் நடிகர், இயக்குனருமான பார்த்திபன் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த அழகி திரைப்படத்தின் மூலம் தான் ஜார்ஜ் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து இவர் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் இவர் படங்களில் துணை வேடங்களில், நகைச்சுவை வேடங்களில் தான் நடித்திருக்கிறார்.


அதிலும் இவருடைய நகைச்சுவை எல்லாமே வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் இருக்கும். அத்தோடு கலகலப்பு படம் முதல் சமீபத்தில் வந்த நாய் சேகர் படம் வரை என அனைத்திலும் இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அதுமட்டும் இல்லாமல் பொய் சொல்ல போறோம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள் போன்ற படங்களில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது. இதன் பின் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கைதி படத்தில் கதாநாயகனுக்கு நிகராக இவருடைய நடிப்பு இருந்தது. 


மேலும் இப்படி திரையுலகில்  முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் இவருடைய மகனும் சினிமாவில் நடித்துள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இவருடைய மகன் பிரிட்டோ தற்பொழுது ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துள்ளார். அது குறித்த புகைப்படங்கள் தற்பொழுது சமூகவலைத்தளத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.


இவ்வாறு நடிகர் ஜார்ஜ்க்கு இவ்வளவு பெரிய மகனா? என ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரிட்டோ குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில் இவர் நடிக்கப் போகும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement