• Apr 27 2024

வெளியானது 'விடுதலை' படத்தின் முதல் விமர்சனம்.. என்னது படம் வெற்றியா..? குஷியில் சூரி ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

வெற்றிமாறன் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'விடுதலை'. மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். 


எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீஸிற்கு காத்திருக்கின்றது. அந்தவகையில் வருகிற 31ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.


இந்நிலையில் இப்படம் குறித்து முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இந்த விமர்சனத்தில் ' படம் சிறப்பாக வந்துள்ளது, மீண்டும் ஒரு வெற்றிப்படத்தை வெற்றிமாறன் கொடுத்துள்ளார்' என கூறப்படுகிறது.


அதுமட்டுமல்லாது இப்படத்தினை இளையராஜா பார்த்து முடித்த பின்னர், நடிகர் சூரியின் நடிப்பு பிரமாதம் என கூறி பார்ட்டியுள்ளாராம். இத்தகைய விமர்சனங்களின் மூலம் விடுதலை படம் கண்டிப்பாக வெற்றியடையும் என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது

இதனை அறிந்த சூரி ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் உள்ளனராம்.

Advertisement

Advertisement

Advertisement