• May 12 2024

பூவையார் வாங்கிய புதுக்கார்... பெறுமதியைக் கேட்டு வாயடைத்துப் போன ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாகிய விஜய் டீவியில் ஒளிபரப்பான 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் தான் பூவையார் என்கிற கப்பீஸ்.


பூவையார் சாதாரணமான ஒரு சிறுவனாக கிராமத்தில் கானா பாடல் பாடிக்கொண்டிருந்தவராவார். பின்னர் சங்கீதம் முறைப்படி கற்ற மாணவர்களுடன் போட்டியிட்டு பைனல் வரை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அத்துடன் இவருக்கு பிகில் திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் விஜய் உடன் பாடி அசத்தி இருந்தார்.


அதனை தொடர்ந்து ஆதி தனது பாடல் ஆல்பம் அல்லது திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு பூவையாருக்கு கொடுப்பதாக கூறினார். அத்தோடு 'மாஸ்டர்' படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார் பூவையார். 


இவ்வாறாக சினிமாவில் பாடல்கள் பாடி ஜெயித்துவரும் இவர் தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த காரின் புகைப்படம் வெளியாக அனைவரும் பாராட்டி வந்தனர்.


இந்நிலையில் இந்தக் கார் பற்றிய மற்றுமோர் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது பூவையார் வாங்கிய கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் (TATA Punch) கார் ஆகும். இந்த கார் சுமார் 5.93 லட்சம் ரூபாய் முதல் 9.49 லட்சம் ரூபாய் வரை பெறுமதியானது எனக் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement