• May 29 2023

தி கேரளா ஸ்டோரி இயக்குநர் மருத்துவமனையில் திடீர் அனுமதி...நடந்தது என்ன..?

Aishu / 2 days ago

Advertisement

Listen News!

 தி கேரளா ஸ்டோரி படத்தை இயக்கி நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பிய இயக்குநர் சுதிப்தோ சென் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த மே 5ம் தேதி தி கேரளா ஸ்டோரி படம் வெளியானது. இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் லீடு ரோலில் அதா சர்மா நடித்து இருந்தார். சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்த சித்தி இத்னானி, நடிகை தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

கேரளாவில் நர்சிங் படிக்கச் சென்ற 3 பெண்களை இஸ்லாமியர்களாக மதம் மாற்றி சிரியாவுக்கு கூட்டிச் சென்று ஐஎஸ் தீவிரவாதிகளாக மாற்றிவிடுவதாக இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தனர்.

கேரளாவில் சுமார் 32 ஆயிரம் இந்து பெண்கள் இதுபோல மதம் மாற்றப்பட்டு தீவிரவாதிகளாக மாற்றப்பட்டதாக இயக்குநர் சுதிப்தோ சென் படத்தின் ப்ரமோஷனல் நிகழ்ச்சிகளில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

கேரள அரசு இந்த படத்தைத் தடை விதிக்க வேண்டும் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் உச்சநீதிமன்றம் இந்த படத்துக்கு தடை விதிக்க முடியாது என தீர்ப்பு வழங்கியதால் நாடு முழுவதும் கடந்த மே 5ம் தேதி படம் வெளியானது. அத்தோடு இப் படத்தின் கிளைமேக்ஸிலும் பாதிக்கப்பட்ட பெண்கள் பேசுவதையும் காட்சிப் படுத்தி இருந்தார்.

இதுவரை எந்தவொரு இந்திய நடிகையும் நடித்த ஹீரோயின் சென்ட்ரிக் படங்களும் இந்தியாவில் 200 கோடி வசூல் சாதனை செய்யவில்லை என்றும் அதா சர்மா நடித்த தி கேரளா ஸ்டோரி தான் அந்த சாதனையை செய்ததாக படக்குழுவினர் சமீபத்தில் அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டு இருந்தனர்.

நடிகை அதா சர்மா ராணுவ வீரர்கள், கல்லூரி பெண்கள் என பலரையும் சந்தித்து புகைப்படங்களை எடுத்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகின்றார்.

200 கோடி வசூல் ஈட்டிய சந்தோஷத்தில் படக்குழு இருந்து வந்த நிலையில், தற்போது திடீரென அந்த படத்தின் இயக்குநர் சுதிப்தோ சென் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அத்தோடு தி கேரளா ஸ்டோரி படத்தை நாடு முழுவதும் ப்ரமோஷன் செய்ய பல நகரங்களுக்கு சென்று அலைந்து திரிந்ததில் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டு இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர். விரைவில், வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Advertisement

Advertisement

Advertisement