• May 18 2024

விஜய்டிவி பிரஜனின் 'டி 3' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சின்னத்தம்பி ,அன்புஷன் குஷி போன்ற சீரியல்களில் நடித்து பிரபல்யமானவர் தான் பிரஜன். இவர் தற்பொழுது அறிமுக இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் 'டி 3' என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக வித்யா பிரதீப் நடித்திருக்கிறார்.

இதில் சார்லி, வர்கீஸ் மேத்யூ, மோகமுள் அபிஷேக் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். பீமாஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் மனோஜ் மற்றும் ஜேகேஎம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சாமுவேல் காட்சன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீஜித் எடவானா இசையமைத்துள்ளார்.

மேலும் இப்படத்திற்கு மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒரே நாளில் நடக்கும் கதைகளை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தின் டைட்டில் லுக்கை சமீபத்தில் இயக்குநர் வெங்கட்பிரபு வெளியிட்டார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, 'டி 3' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement