பிக்பாஸ் சீசன் 8 இல் பங்கு பற்றிய அருண் நேர்காணல் ஒன்றில் கலந்த வீடியோ சமீபத்தில் வெளியாகி உள்ளது. அதில் அருணின் காதலி அர்ச்சனா மற்றும் தாய் ,தந்தை ஆகியோரும் கலந்திருந்தனர். அத்துடன் அர்ச்சனாவுக்கு அருண் பற்றி இதுவரைக்கும் தெரியாத உண்மைகளும் வெளியாகி உள்ளது.
அதில் அருணின் தந்தை கூறுகையில் , அருணின் குழப்படியை தாங்க முடியாமல் என்ன செய்யுறது என்று தெரியாமல் நாங்கள் ஹாஸ்டலில் கொண்டுபோய் விட்டுவிட்டோம் அருண் திருந்தட்டும் என்று. ஆனால் ஹாஸ்டலிலும் அருண் குழப்படி செய்வதை குறைக்கவே இல்லை என்றார்.
மேலும் அருண் அந்தப் பேட்டியில் எல்லா நடிகர்களுக்கும் வெளியில் நிறைய fans இருப்பார்கள் ஆனால் எனக்கு மிகப்பெரிய fan என்னுடைய தந்தை தான் என பெருமையுடன் கூறியிருந்தார். எனது தந்தை என்னுடைய எல்லா படங்களையும் ரொம்பவே ரசித்து பார்ப்பார் எனவும் கூறியுள்ளார்.
அது மட்டும் இல்லாது நடிப்பதற்கான வாய்ப்பு இல்லாது இருந்த போது என்னுடைய தந்தை எனக்கு support ஆக இருந்து பல உதவிகளை செய்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் தனது தந்தையை எத்தனையோ பேர் கேட்டிருக்கிறார்கள் ஏன் இந்த நடிப்பு துறைக்குள் செல்ல அனுமதித்தீர்கள் வேற ஏதும் வேலை செய்ய விட்டிருக்கலாம் என்று. எனினும் தனது தந்தை அவர்கள் கூறிய எதையும் காதில் வாங்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
Listen News!