• Dec 04 2023

அசீமைத் தூக்கிச் சென்ற போட்டியாளர்கள்... உடனே கத்திய அசீம்... நடந்தது என்ன... வெளியானது ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனானது ஆரம்பமாகி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாதவாறு சென்று கொண்டு இருக்கின்றது.அடுத்து என்ன நடக்கப்போகின்றது என ரசிகர்களின் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு சம்பவங்களும் நடைபெற்று கொண்டு இருக்கின்றது.

அந்தவகையில் கோபம், பொய், புரளி, அழுகை, சிரிப்பு என ரசிகர்களின் உணர்ச்சியும் நாளுக்கு நாள் அதிகரித்துச் சென்ற வண்ணம் தான் இருக்கின்றன. சில நேரத்தில் பார்த்தால் ஒற்றுமையாக இருந்து பேசிக் கொள்வார்களா, ஒரு மணி நேரம் கழித்துப் பார்த்தால் உடனே சண்டை இடத் தொடங்கி விடுவார்கள்.


இந்நிலையில் இன்றைய தினத்திற்குரிய முதலாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் ராஜ வம்சமும் அருங்காட்சியகமும் என்ற டாஸ்க் பிக்பாஸினால் கொடுக்கப்படுகின்றது. மேலும் பிக்பாஸ் றோயல் மியூசியமாக மாறப்போகிறது எனவும் கூறப்படுகின்றது.

மேலும் போட்டியாளர்கள் அனைவரும் 3அணியாகப் பிரிய வேண்டும் எனவும் கூறப்படுகின்றது. அதில் ஒரு அணியினர் ராஜா குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக மாற வேண்டும் எனக் கூறப்படுகின்றது. உடனே ஒவ்வொருவரும் நான் ராஜா, நான் ராணி, நான் இளவரசி எனக் கூறி ஒவ்வொரும் போட்டி இடுகின்றனர். 

மேலும் அதில அசீம் தான் இளவரசர் எனக் கூறுகின்றார். உடனே போட்டியாளர்கள் அனைவரும் அவரை அசால்ட்டாக தூக்கி செல்கின்றனர். உடனே அசீம் "பிக்பாஸ் பிக்பாஸ்" எனக் கத்துகின்றார். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ ஆனது மிகவும் கலகலப்பாக வெளிவந்து இருக்கின்றது.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement