• May 09 2024

உலகளவில் 'விருமன்' செய்துள்ள வசூல்... இத்தனை கோடியா..? வாயைப் பிளந்த ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  நடிகராக அறிமுகமாகி இன்று தன்னுடைய திறமையினாலும், கடின உழைப்பாலும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து வைத்திருப்பவர் நடிகர் கார்த்தி. முன்னணி ஹீரோக்களுக்கு எவ்வளவு ரசிகர் கூட்டம் இருக்குமோ அந்தளவிற்கு இவருக்கும் ரசிகர் கூட்டம் உண்டு. அறிமுக காலத்திலிருந்து இன்றுவரை பல படங்களிலும் சிறப்பாக நடித்து வருகின்றார்.



அந்த வகையில் 'கொம்பன்' படத்தை தொடர்ந்து கார்த்தி மீண்டும் முத்தையா இயக்கத்தில் நடித்த 'விருமன் ' திரைப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக வெளியான நிலையில் இந்த படத்திற்கு சிலர் மட்டுமே நெகடிவ் கருத்துக்களை முன்வைத்து வந்தாலும், பலர் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் மூலம் படத்தை வெற்றிபெற செய்துள்ளனர்.



அத்தோடு இந்த படத்தில் நாயகியாக அறிமுகமாகியுள்ள பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி தன்னுடைய முதல் படத்தியிலேயே ரசிகர்கள் பலரின் மனதில் இடம்பிடித்து விட்டார். அத்தோடு யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களுமே அல்டிமேட் என ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.  இந்த படத்தில் பிற கதாபாத்திரங்களில் நடித்துள்ள ராஜ்கிரன், சூரி, பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி என அனைவரும் தங்களின் கதாபாத்திரத்திரத்திற்கு பொருந்தி சிறப்பாக நடித்துள்ளனர்.



விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றுள்ள இந்த படத்தை ஏற்கனவே தன்னுடைய சகோதரர் கார்த்தியை வைத்து 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை தயாரித்த சூர்யா தான் தன்னுடைய 2டி தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



நல்ல வசூல் வேட்டை நடத்திவரும் இப்படம் 6 நாள் முடிவில் சென்னையில் மட்டுமே ரூ. 1.8 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம். அத்தோடு 400க்கும் அதிகமான திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படம் ஆனது உலகளவில் இதுவரை சுமார் ரூ. 55 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement