• May 19 2024

தாங்க்ஸ் தக்காளி.. கிட்டத்தட்ட உறுதியான தமன்னா-விஜய் காதல்.. வைரலாகும் பதிவு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை தமன்னாவும், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் காதலிப்பதாக சமீபகாலமாக ஒரு செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது. இருப்பினும் இவர்கள் இருவரும் இதுவரை தங்கள் காதலை வெளிப்படையாக உறுதி செய்யவில்லை. 


அதாவது புத்தாண்டை கொண்டாட கோவாவுக்கு சென்ற இடத்தில் விஜய் வர்மாவும், தமன்னாவும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியானதைத் தொடர்ந்தே இவ்வாறான கிசுகிசுக்கள் வெளிவந்தது.

இந்நிலையில் விஜய் வர்மா நடித்திருக்கும் தஹாத் சீரீஸ் பெர்லின் திரைப்பட விழாவில் சமீபத்தில் திரையிடப்பட்டது. இது குறித்து மொத்த குழுவுக்கும் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார் தமன்னா. 


தமன்னா வெளியிட்ட அந்த போஸ்ட்டை ஷேர் செய்து நன்றி டமாட்டர்(தக்காளி) என தெரிவித்துள்ளார் விஜய் வர்மா. இதனைப் பார்த்த ரசிகர்கள் "ஓ தமன்னாவுக்கு செல்லப் பெயர் தக்காளியா, பொருத்தமான பெயர் தான்"எனக் கூறி வருகின்றனர்.


இதனையடுத்து ரசிகர் ஒருவர் விஜய் வர்மாவிடம் உங்களுக்கு தக்காளியை பிடிக்குமா என்று கேட்டார். அதற்கு விஜய் வர்மாவோ, எனக்கு மிகவும் பிடிக்கும் என தக்காளி புகைப்படத்தை வெளியிட்டு குறும்புத்தனமாக பதில் அளித்துள்ளார். இது தக்காளியையா இல்லை தமன்னாவையா சொல்லுகிறார் என்று ரசிகர்கள் பலரும் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement

Advertisement