• Sep 22 2023

திடீரென வெளிநாட்டுக்குச் சென்ற Thalapathy Vijay!- வெளியாகிய Recent Click- இது தான் காரணமா?

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் அளவுக்கு வசூல் மன்னனாக விளங்குபவர் தான் நடிகர் விஜய். ஏராளமான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் இவர் நடிப்பில் தற்பொழுது லியோ என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. அக்டோபர் மாதம் ரிலீஸாகவுள்ள இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அத்தோடு ஏராளமான நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார்.


 ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.இப்படத்திற்காக விஜய்க்கு ரூ. 200 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய்  வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி இருவருடனும் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார்.

அங்கு தளபதி 68 படத்தில் வரும் விஜய்யின் லுக்கை நவீன தொழில்நுட்பம் கொண்டு உருவாக்க இருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில், USA-விற்கு சென்றுள்ள நடிகர் விஜய் விமான நிலையத்தில் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.











Advertisement

Advertisement

Advertisement