• Jan 18 2025

தளபதி 68:- New Update News... நடிகர் விஜய்க்கு இணையாக நடிகர் பிரஷாந்துக்கு கொடுக்கப்பட்ட சூப்பர் ரோல்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் தற்போது லியோ படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய் முதல் முறையாக நடிக்கின்றார் என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

கண்டிப்பாக தளபதி 68 திரைப்படத்தின் விஜய்யின் திரைப்பயணத்தில் வித்யாசமான ஒரு படமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கு ஏற்றாற்போல இப்படம் டைம் ட்ராவல் கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என தகவல்கள் வருகின்றன. 


இந்நிலையில் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்து வருகின்றனர். குறிப்பாக 90 காலகட்டங்களில் ரஜினி மற்றும் விஜய்க்கு இணையான வெற்றி படங்களை கொடுத்த பிரஷாந்த் விஜய்யுடன் இணைந்து நடிப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


ஒரு கட்டத்தில் முன்னணி நடிகராக ஜொலித்து வந்த பிரஷாந்த் தற்போது திரைத்துறையில் தன் செகண்ட் இன்னிங்க்ஸை தளபதி 68 மூலம் துவங்கவுள்ளார். எனவே இப்படத்தில் பிரஷாந்திற்கு விஜய்க்கு இணையான ரோல் கொடுக்கப்பட்டிருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னணி ஹீரோவாக வலம் வந்த பிரஷாந்திற்கு கண்டிப்பாக வெங்கட் பிரபு சிறப்பான ரோலை கொடுத்திருப்பார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றது.


விஜய்யின் தளபதி 68 படத்தில் பிரசாந்தின் ரோல் பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி தளபதி 68 திரைப்படத்தில் விஜய்யின் நெருங்கிய நண்பராக நடிக்கிறாராம் பிரஷாந்த். கிட்டத்தட்ட விஜய்க்கு சமமான ரோலாக பிரசாந்தின் ரோல் இருக்குமாம். மேலும் அவரின் கதாபாத்திரம் தான் கதையில் பல திருப்பங்களை கொண்டு வரும் என்றும் தகவல் கிடைத்துள்ளது

Advertisement

Advertisement