• Apr 27 2024

அரபு நாட்டில் துணிவு பட ராஜ்ஜியம்... லிஸ்டில் கூட வராத விஜய்யின் வாரிசு

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாகத் திகழ்ந்து வருபவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவருக்குமே கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். 

மேலும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ரசிகர்களின் பிரம்மாண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் 'வாரிசு' படமும் அஜித்தின் 'துணிவு' திரைப்படமும் வெளியாகி இருந்தது.

இவ்விரண்டு படங்களும் வெளியாகிய நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அத்தோடு இரண்டு படங்களும் வெளியாகி ஐந்து நாட்களாகும் நிலையில், தமிழகத்தில் 'துணிவு' திரைப்படம் இதுவரை 65 கோடி வசூல் செய்துள்ளதாகவும், வாரிசு திரைப்படம் 63 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், அரபு நாடுகளில் வாரிசை விட துணிவு படத்தின் வசூல் உச்சம் தொட்டுள்ளது.

அத்தோடு  குவேத்தில் ஒரு பெரிய திரையரங்கில் இந்த வாரம் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்களில் துணிவு இடம்பெற்றுள்ளது, ஆனால், வாரிசு அந்த லிஸ்டில் இணையவில்லை.

Advertisement

Advertisement

Advertisement