• May 18 2024

அனல் தெறிக்கும் லியோ படத்தின் தமிழ் போஸ்டர்- வேற லெவலில் சம்பவம் இருக்கு.....

stella / 7 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்யின் லியோ படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அடுத்தமாதம் 19ம் தேதி சர்வதேச அளவில் இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை, தலக்கோணம் போன்ற பகுதிகளில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக லியோ வெளியாகவுள்ளது. 


இதற்கான வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், வரும் 30ம் தேதி படத்தின் இசை வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளன.மேலும் கடந்த இரண்டு நாட்களாக லியோ படம் குறித்த அப்டேட்டுக்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அதன்படி கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளுக்குரிய லியோ படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. நேற்றைய தினம் விஜய் ஆண்டனியின் மகள் இறந்த காரணத்தினால் போஸ்டர் எதுவும் வெளியாகாமல் இருந்தது.


இதனை அடுத்து இன்றைய தினம் தமிழ் ரசிகர்களைக் குஷிப்படுத்தும் விதமாக தமிழ் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை விஜய் தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement