• May 01 2024

தாய்லாந்து நாட்டில் பிங்க் நிற வித்தியாசமான உடையில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்த தமன்னா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி எனப் பல மொழிகளில் நடித்து பிரபல்யமானவர். பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த இவர் தற்பொழுது வெப் சீரியல்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.

தற்பொழுது தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சீரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்து வருகின்றார்.சமீபத்திய கேன்ஸ் பட விழாவுக்கான செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தலைமையிலான இந்தியக் குழுவில் நடிகை தமன்னாவும் இடம்பெற்றுள்ளார்.

இவ்விழாவை முடித்த பின்னர் தாய்லாந்துக்கு சென்றுள்ளார். அங்கும் சுற்றுலா சென்ற இடங்களில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருந்தார்.

இந்நிலையில் தனது புதிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். குஜராத் பதிவெண் கொண்ட வாகனத்தின் முன் நின்று பிங்க் நிற உடையுடன் தோன்றியுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement