• Mar 25 2023

இவரை 9வருடங்களாக காதலிக்கிறேன்... திருமணம் குறித்து முதன் முறையாக மனம் திறந்த டாப்ஸி..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

தமிழில் 'ஆடுகளம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்சி. இதனைத் தொடர்ந்து இவர் 'ஆரம்பம், வை ராஜா வை' போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார். மேலும் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். 


அதிலும் குறிப்பாக குறிப்பாக இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்ட படங்களில் தான் அதிகளவில் நடித்து வருகிறார். டாப்சியும், டென்மார்க் நாட்டை சேர்ந்த பேட்மிண்டன் வீரர்  மத்தியாஸ் போயும் பல வருடங்களாக காதலித்து வருகிறார்கள். 


இதுகுறித்து சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார் டாப்சி. அதாவது "எங்கள் காதலை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. எமது காதலை குடும்பத்தினர் ஏற்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது'' என்று கூறியிருந்தார். 


மேலும் டாப்சியிடம் உங்களுக்கு திருமணம் எப்போது? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளிக்கையில் "நானும், மத்தியாஸ் போயும் 9 வருடங்களாக காதலித்து வருகிறோம். எனது சம காலத்து நடிகைகள் பலருக்கு திருமணம் முடிந்துள்ளது. ஆனால் நான் திருமணத்துக்கு அவசரப்படவில்லை. நாங்கள் இவ்வளவு காலம் காதலித்து வருவது பெரிய விஷயம்" எனத் தெரிவித்துள்ளார்.


மேலும் 'இந்த உறவில் இருந்து நாங்கள் விலக நினைக்கவில்லை. எனது சொந்த வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் போட்டி எதுவும் இல்லை. எனது காதல் வாழ்க்கை குறித்து இதற்கு மேலும் வெளிப்படையாக பேச விரும்பவில்லை'' எனவும் அப்பேட்டியில் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement