• Mar 28 2023

தோனியின் முதல் தமிழ் படம்; குதூகலத்தில் தயாரிப்பாளர்கள்!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகி வரும் ‘Lets Get Married’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தோனி மற்றும் சாக்ஷி சிங் தங்களது தோனி என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரிக்கும் முதல் தமிழ்  படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு மற்றும் நதியா, ஆர்ஜே விஜய் ஆகியோர் முக்கிய  கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இத்திரைப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது, இயக்குநரின் ஒன்லைன் கதையை சாக்ஷி சிங் முழுமையாக்கியுள்ளார். இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி முன்னதாக இப்படத்தின் கதை வித்தியாசமானது என்றும், ஜாலியான குடும்ப பொழுதுபோக்காக இருக்கும் என்றும் கூறினார்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இப்படத்தின் தயாரிப்பு குழுவின் அதிகாரிகள், ‘Lets Get Married’ படப்பிடிப்பு முன்னேற்றம் குறித்தும், படத்தின் ஸ்கிரிப்ட்டை பார்த்தும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் பேசுகையில், எம்.எஸ். தோனி ஒரு தமிழ் படத்தைத் தயாரிப்பது இதுவே முதல் முறை. இப்படத்தின் கதை சுவாரஸ்யமாகவும், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை கண்டு, மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்துள்ளதாக தெரிவித்துள்னர்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு டிசம்பரில் ஹரிஷ் கல்யாண் தனது திருமணத்திற்குப் பிறகு நடிக்கும் முதல் படம் இதுவாகும். மறுபுறம் நடிகை, இவானா கடைசியாக ‘லவ் டுடே’ என்ற பிளாக்பஸ்டர் படத்தை வழங்கினார என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement