• Apr 27 2024

விக்ரம் படத்தில் சூர்யா பேசிய வசனம் இணையத்தில் லீக் -எதிர்பார்த்த ரசிகர்களுக்கு காத்திருந்த ஏமாற்றம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

‘மாநகரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தவர் லோகேஷ். இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலே ரசிகர்களிடத்தே விமர்சனரீதியாக வரவேற்பை பெற்ற இவர், இரண்டாவது படமாக கார்த்தி நடிப்பில் ‘கைதி’ படத்தை இயக்கினார். விஜய்யின் ‘பிகில்’ படத்துடன் நேரடியாக மோதிய இந்தப்படம் லோகேஷின் தனித்துவமான இயக்கத்தால் மெஹா ஹிட் அடித்தது என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில் கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் அவர் நடிப்பில் ‘விக்ரம்’ படத்தை இயக்கியுள்ளார்.

கமலுடன் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட சிறந்த நடிகர்கள் நடித்துள்ளதால் கோலிவுட் திரையுலகமே இப்படத்தை எதிர்பார்த்துள்ளது.

ஆனால் சமீபத்தில் விக்ரம் இபபடத்தில் சூர்யாவும் நடிப்பதாக தகவல் கசிந்தது.கிட்டத்தட்ட சூர்யா அப்படத்தில் நடிப்பது உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நேற்றில் இருந்து விக்ரம் படத்தில் சூர்யா பேசிய வசனங்கள் ஷூட்டிங் ஸ்பாட் ஆடியோ பதிவாக இணையத்தில் கசிந்துள்ளது.

அத்தோடு அந்த பதிவுகளை இணையத்தில் ரசிகர்கள் பரப்பி வருகின்றனர், இதனால் ரசிகர்கள் சூர்யாவின் கதாபாத்திரத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். ஆனால் அந்த ஆடியோ பதிவுகள் எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை.

Advertisement

Advertisement

Advertisement