• Sep 07 2024

சூர்யாவின் படத்தில் முதல் முறையாக கார்த்தி.. கார்த்தி படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா.. வேற லெவல் தகவல்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

சூர்யாவின் படத்தில் கார்த்தி முதல் முறையாக ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அதே போல் கார்த்தி படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் வேற லெவல் தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களாக இருந்து வரும் நிலையில் இருவரும் இணைந்து இன்னும் ஒரு படத்தில் கூட பெரிய அளவில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தியின் ’கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படத்தில் சூர்யா ஒரே ஒரு காட்சியில் நடித்திருந்தாலும் சூர்யா - கார்த்தி ஆகிய இருவரும்  சம அளவில் முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



இந்த நிலையில் சூரியா ’கங்குவா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் இறுதியில் கார்த்தி ஒரு கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அதுமட்டுமின்றி இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் கார்த்தி கேரக்டர் தான் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கூறப்படுகிறது. ’கங்குவா’ படத்திற்கான கார்த்தியின் காட்சிகள் இன்னும் ஒரு சில நாட்களில் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் கார்த்தி நடிக்க உள்ள ’கைதி’ திரைப்படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் ஏற்கனவே அவர் ’விக்ரம்’ படத்தில் நடித்த ’ரோலக்ஸ்’ என்ற கேரக்டரில் தான் ’கைதி’ படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் சூர்யா - கார்த்தி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement

Advertisement