• Apr 16 2026

பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் "சூர்யா 46" படக்குழு ...! வைரல் ஆகும் போட்டோஸ்...!

Roshika / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் பல திரைப்படங்களில் நடித்து  தனக்கென தனி ரசிகர்களை கொண்டிருக்கின்றனர். "கார்த்திக் சுப்புராஜ்" இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான "ரெட்ரோ" திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் வசூல் ரீதியிலும் சாதனை படைத்திருந்தது. இந்த நிலையில்  "சூர்யா 46" திரைப்படத்தின் திரைக்கதையை வைத்து  சாமி தரிசனம் செய்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 


மேலும் "சூர்யா 46" திரைப்படத்தினை வாத்தி ,மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கவுள்ளார் . இதனைத் தொடர்ந்து இந்த படத்தில் ராதிகா சரத்குமார், ரவீனா தண்டன், மமிதா பைஜு ஆகியோர் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளார்கள் . மேலும் ஜீவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். 


இந்த படத்திக்கான பூஜையை  பழனி முருகன் கோயிலில் திரைக்கதையை வைத்து பூஜை செய்துள்ளனர். இந்த பூஜையில் சூர்யாவும் படகுழுவினரும் பங்கு கொண்டு  சிறப்பாக நடத்தி முடித்துள்ளார்கள்.  இந்நிலையில் பூஜையில் கலந்து கொண்ட  வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருவதுடன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் .







Advertisement

Advertisement