• Dec 01 2022

மனைவி ஜோதிகாவின் காதல் பட படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்ற சூர்யா- வைரலாகும் வீடியோ

Listen News!
stella / 3 weeks ago
image
Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவைத் திருமணம் செய்திருப்பதோடு இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர் என்பதும் முக்கியமாகும்.மேலும் இவர்கள் இருவரும் பிஸியாக படங்களில் நடித்தும் வருகின்றனர்.

அந்த வகையில் சூர்யா ,சூர்யா47 மற்றும் வணங்கான் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்.ஜோதிகா, பிரபல மலையாள நடிகரான மம்முட்டியுடன் இணைந்து காதல் - தி கோர் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 


அந்த திரைப்படத்தை கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை இயக்கிய Jeo Baby இயக்குகிறார். இந்தப் படத்தை மம்முட்டியின் மம்முட்டி கம்பெனி மற்றும் வேஃபேரர் ஃபிலிம் இணைந்து தயாரிக்கின்றனர். இதற்கான அறிவிப்பை புதிய போஸ்டர் உடன் கடந்த மாதம் வெளியிட்டனர்.காதல் - தி கோர் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது. இந்த பூஜையில் முக்கிய நடிகர் நடிகைகள் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் காதல் - தி கோர் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சூர்யா விசிட் அடித்துள்ளார். அப்போது நடிகர் மம்முட்டியுடன் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து உணவு சப்பிட்டுள்ளனர். தற்போது அவர்கள் மூவரும் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.