• Apr 27 2024

திருநங்கை போட்டியாளர் சிவினை அசிங்கப்படுத்திய அசீம்... கொதித்தெழுந்த சுரேஷ் தாத்தா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 ஆனது  ஆரம்பமாகி தற்போது விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் இடம்பெற்று வருகின்றது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒவ்வொரு விதமாக உள்ளனர்.


அதிலும் குறிப்பாக அசீம் வரம்பு மீறி அவரை எதிர்த்து பேசும் போட்டியாளர்களிடம் விசித்திரமான பாடி லேங்குவேஜ் உடன் கிண்டல் செய்யும் வகையில் பேசுகின்ற காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கடுப்பில் ஆழ்த்தி வருகின்றன. 


அந்தவகையில் சிவினிடம் அவர் நேற்று நடந்து கொண்ட விதம் ரசிகர்களை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. அதாவது ஷெரின் மடியில் உட்கார்ந்தது, தனலட்சுமியை அந்த இடத்தில் கை வைத்து தள்ளியது என தொடர்ந்து அராஜகம் செய்து வருகிறார் அசீம் என புகார்கள் குவிந்து வருகின்றன. 


இதனால் சோஷியல் மீடியா முழுக்க அசீமை பூமர் அங்கிள் என்றும் மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் ட்ரோல்கள் பறக்கின்றன.மேலும் சிவின் செய்தது போன்றே செய்து காட்டி அவரை கலாய்த்திருக்கிறார் அசீம். 

ஒரு தேசிய தொலைக்காட்சியில் திருநங்கையை இப்படித் தான் கிண்டல் செய்வதா என்று பார்வையாளர்கள் கொந்தளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சிவினை பார்த்து அப்படி கையசைத்து ஆக்‌ஷன் பண்ணது ரொம்பவே அசிங்கமான செயல் என முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அசீமை தற்போது வன்மையாக கண்டித்துள்ளார்.


இவரின் இந்தப்  பதிவிற்கு ரசிகர்கள் பலரும் தங்களது ஆதரவினைத் தெரிவித்து வருகின்றனர்.



Advertisement

Advertisement

Advertisement