• May 08 2024

போயஸ் கார்டன் பகுதியில் வாக்கிங் செல்லும் சூப்பர் ஸ்டார் ரஜினி- வைரலாகும் கெத்தான வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் ரஜினி வயசானாலும் தனக்கே உரித்தான பாணியில் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் தான் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இறுதியாக அண்ணாத்த என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது.இப்படம் வசூலில் அள்ளிக் குவித்தது.

மேலும் இதனைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தின் படப்பிடிப்பானது சென்னையை சுற்றி உள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சென்னை திரைப்படக் கல்லூரியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் நடிகர் ராஜேஷை சந்தித்து வாழ்த்து கூறினார்.அதற்கான புகைப்படங்களும் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் பகுதியில் நடை பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.அதை ஒரு ரசிகர் தன்னுடைய மொபைலில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். 

அந்த வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் தனக்கே உரிய வேக நடையுடன் நடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த வீடியோவை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement