• May 08 2024

ஜெயிலர் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட சன்பிக்சர்ஸ்-குஷியில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் சூப்பர் நடிகராக திகழ்பவர் நடிகர் ரஜனி.'இவரது 169வது படத்தில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சனுடன் பணிபுரிகிறார். மேலும் இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரித்து வழங்கின்றது.

இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி .மேலும்  இப்படத்துக்கு 'ஜெயிலர்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் சென்னையில் துவங்கியது. சென்னை ஆதித்ய ராம் ஸ்டூடியோ, மகாபலிபுரத்தில் நடந்த முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து.

அத்தோடு இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூர் மாவட்டத்தில் உள்ள அழகிய நத்தம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.

இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். அத்தோடு பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா  ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் இந்த படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகிறார்..

இந்நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் டிவிட்டர் பக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு இருக்கிறது. இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்



Advertisement

Advertisement

Advertisement