• Apr 27 2024

சன்னி லியோன் நடித்த கென்னடி திரைப்படத்திற்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் கிடைத்த பாராட்டு

stella / 11 months ago

Advertisement

Listen News!


பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரத்தில் வருடந்தோரும் கேன்ஸ் திரைப்பட விழா நடைபெறும். 1946ஆம் ஆண்டிலிருந்து நடக்கும் இந்த விழா சினிமா துறையில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவுக்கு அடுத்து பெரிய விழாவாக கருதப்படுகிறது. அந்த வகையில் 76ஆவது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. 27ஆம் தேதிவரை கோலாகலமாக நடக்கும் இந்த விழாவில் சர்வதேச திரைப்பட நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் கலந்துகொள்வார்கள்.

கேன்ஸ் விழாவில் மற்றொரு சிறப்பு சிவப்பு கம்பள வரவேற்பு. அதில் நடப்பதை பலரும் தங்களது வாழ்நாள் கௌரவமாக கருதுகின்றனர். அதன்படி இந்தியாவிலிருந்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன், The Elephant whisperers ஆவண படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்கியா, முன்னாள் உலக அழகி மனுஷி சில்லார் நடிகைகள் சாரா அலிகான், இஷா குப்தா, மிருணால் தாக்கூர், அனுஷ்கா ஷர்மா, ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் சிவப்பு கம்பள வரவேற்பை பெற்றனர்.


அதேபோல் நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான குஷ்பூ இந்திய பிரதிநிதியாக இவ்விழாவில் கலந்துகொண்டார். இயக்குநர் விக்னேஷ் சிவனும் இவ்விழாவில் கலந்துகொண்டு ஸ்பைடர் மேன் நடிகருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி இணையத்தில் ட்ரெண்டானது. விக்னேஷ் சிவன் கலந்துகொண்டதால் நயன்தாராவும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவர் கலந்துகொள்ளவில்லை.

இதனையடுத்து வருடம் தவறாமல் கேன்ஸ் விழாவில் கலந்துகொள்ளும் ஐஸ்வர்யா ராய் இந்த முறையும் வித்தியாசமான உடை அணிந்து கலந்துகொண்டார். அவரது உடையை பார்த்த ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்யவும் ஆரம்பித்தனர். நடிகை நந்திதா தாஸ்கூட, கேன்ஸ் விழா என்பது திரைப்படங்களுக்கானது உடைகளுக்கானது அல்ல என ஓபனாக பேசியிருந்தது .இந்நிலையில் அனுராக் காஷ்யப் இயக்கி ராகுல், சன்னி லியோன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் கென்னடி. 


இந்தப் படமானது கேன்ஸ் திரைப்பட விழாவில் மிட் நைட் ஸ்க்ரீனிங்கில் திரையிடப்பட்டது. படத்தை பார்த்தவர்கள் ஏழு நிமிடங்கள் எழுந்து நின்று கை தட்டி தங்களது பாராட்டை தெரிவித்தனர். அதனை சன்னி லியோன், அனுராக் காஷ்யப், ராகுல் பட் உள்ளிட்டோர் ஏற்றுக்கொண்டனர். அவர்களில் ராகுல் பட் கொஞ்சம் எமோஷனலாகவே காணப்பட்டார்.


இதற்கிடையே இந்தப் படத்தில் நடிப்பதற்கு முதலில் சியான் விக்ரமை அணுகியதாக இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்திருந்தது. அதுதொடர்பாக அவர் கொடுத்த பேட்டி ஒன்று சில நாள்களுக்கு முன்பு இணையத்தில் ட்ரெண்டானது. அதனைப் பார்த்த விக்ரம் அனுராக் காஷ்யப்புக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட விளக்கம் கொடுத்திருந்தது நினைவுகூரத்தக்கது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement