பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, ஈஸ்வரி இனியாவுக்கு எல்லா பிரச்சனையையும் தாங்கிற சக்தியையும் தைரியத்தையும் கொடுக்கச் சொல்லி கடவுளிட்ட வேண்டுறார். இதனை தொடர்ந்து இனியாவை பார்த்து ஈஸ்வரி அழுதுகொண்டிருக்கிறார். அதைப் பார்த்த கோபி ஏன் அம்மா குழந்தை மாதிரி அழுதுகொண்டிருக்கீங்க என்று கேட்கிறார். மேலும் நீங்க தைரியமாக இருங்க என்று சொல்லுறார்.
பின் எழில் ஈஸ்வரியைப் பார்த்து இனியாவுக்கு டிவோர்ஸ் கிடைச்சால் அவள் சரி ஆகிடுவாள் என்று சொல்லுறார். இதனை தொடர்ந்து கோபி இனியாவை ஹோர்ட்க்கு கூட்டிக் கொண்டு போறார். பின் கோபி காரில போகும்போது இனியாவை பார்த்து சுதாகரோட குடும்பம் கதைக்க try பண்ணாலும் கதைக்க வேணாம் என்கிறார்.
அதை அடுத்து எழில் நானா ஒரு பிரச்சனையும் பண்ண மாட்டேன் ஆனா அவங்க ஏதாவது செய்தால் நான் சும்மா இருக்க மாட்டேன் என்கிறார். பின் ஹோர்ட்டில judge இனியாவோட வழக்கை பாத்திட்டு ரெண்டு மாசத்தில் டிவோர்ஸ் பண்ணுறதுக்கு எதுக்காக கல்யாணம் பண்ணனும் என்று கேட்கிறார். இதனை அடுத்து பாக்கியா இனியாவை பார்த்து எதை பற்றியும் ஜோசிக்காமல் அமைதியா இரு என்கிறார்.
அதைத் தொடர்ந்து சுதாகர் பாக்கியா கிட்ட வந்து டிவோர்ஸ் பற்றிக் கதைக்கிறார். பின் நிதீஷ் இனியா கிட்ட வந்து நினைச்ச மாதிரியே டிவோர்ஸுக்கு எல்லா வேலையும் செய்து முடிச்சிட்ட என்று சொல்லுறார். மேலும் டிவோர்ஸ் பண்ணிட்டு என்ன பண்ணப்போற என்று கேட்கிறார். அதுக்கு இனியா அதை தெரிஞ்சு கொண்டு நீ என்ன பண்ணப்போற என்கிறார். பின் நிதீஷ் டிவோர்ஸ் ஆன பிறகு ஆகாஷோட போய் இருக்கப் போறீயா என்று கேட்கிறார். இதை பார்த்த பாக்கியா இனியா கிட்ட வந்து நிதீஷை தள்ளி போகச்சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!