• Apr 01 2025

AK க்கு - SK சொன்ன திடீர் வாழ்த்து..!! என்ன சொல்லி இருக்காரு பாருங்க..

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகரான அஜித் குமார் மற்றும் அவருடைய கார் ரேசிங் அணியான அஜித்குமார் ரேசிங் அணி நேற்று முதல் 24 மணி நேர கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளது. இதற்காக அஜித் தனது உடல் எடையை பெருமளவு குறைத்து உள்ளார்.

அஜித் குமார் கலந்து கொண்டுள்ள ரேசில் மொத்தமாக 24 மணி நேரம் காரை ஓட்ட வேண்டும். அவருடைய அணியில் அவருக்கு நான்கு வீரர்கள் உள்ளனர். அணியின் கேப்டனாக அஜித்குமார் காணப்படுகின்றார். இதனால் அஜித் குமார் ரேசிங்கில் வெற்றி பெற பல ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

d_i_a

மேலும் நேற்றைய தினம் அஜித்குமார் வழங்கிய பேட்டியில், இனிமேல் கார் ரேசிங் நடக்கும் சீசன்களில் நான் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள மாட்டேன். அதன்படி அக்டோபர் முதல் மார்ச் வரை எந்த படப்பிடிப்புகளும் கலந்து கொள்ள மாட்டேன்  எனது முழு கவனமும் கார் ரேஸிங் தான் உள்ளது என  தகவல் ஒன்றை தெரிவித்திருந்தார்.


அஜித் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கள் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளன. மேலும் இந்த ஆண்டு கார் ரேஸ் பந்தயமும் காணப்படுவதால் அஜித்துக்கு இந்த ஆண்டு முக்கியமான ஆண்டாகவே பார்க்கப்படுகின்றது.


இந்த நிலையில், 'உங்களுடைய ஆர்வமும் அர்ப்பணிப்பும் தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் அளிக்கின்றது.. எதிலும் நீங்கள் மகத்தான வெற்றியைப் பெற வாழ்த்துகின்றேன்..' என துபாயில் நடைபெற்று வரும் 24h ரேஸில் பங்கேற்கும் நடிகர் அஜித்குமாருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தற்போது இவருடைய பதிவு வைரல் ஆகி வருகின்றது.

Advertisement

Advertisement