• Apr 02 2025

AR முருகதாஸின் ஷூட்டிங்கை ரத்து செய்த ராஷ்மிகா.. பின்னணியில் இப்படியொரு விபத்தா?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு, இந்தி, தமிழ் என பல மொழிகளிலும் நடித்து பிரபலமானவர்தான் ராஷ்மிகா மந்தனா. இவர் இறுதியாக நடித்த புஷ்பா 2 திரைப்படம் 1500 கோடிகளையும் கடந்து மிகப்பெரிய சாதனை படைத்தது. அதில் இவருடைய ஸ்ரீ வள்ளி கேரக்டர் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

இதை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் சிக்கந்தர் படத்தில் நடித்து வருகின்றார் ராஷ்மிகா. இந்த படத்தில் சல்மான் கான், சத்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றார்கள். தற்போது இந்த படத்தின் இறுதி கட்டப்பட படிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

d_i_a

இந்த நிலையில், ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ராஷ்மிகா எதிர்பாராத விதமாக காயமடைந்துள்ளார். இதனால் சிக்கந்தர் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகியுள்ளன.


இது தொடர்பில் ராஷ்மிகா மந்தனா தரப்பில் இருந்து வெளியான தகவலின்படி, ராஷ்மிகா தற்போது நன்றாக குணமடைந்து வருகின்றார். மருத்துவர்கள் ஆலோசனைப்படி அவர் ஓய்வெடுத்து வரும் நிலையில் விரைவிலேயே படப்பிடிப்பில் கலந்து கொள்ளுவார் என தெரிவித்துள்ளனர்.

எனவே ராஷ்மிகா மந்தனாவை மருத்துவர்கள் ஓய்வில் இருக்குமாறு கூறியுள்ளதால் ராஷ்மிகாவின் படப்பிடிப்பு பணிகள் அத்தனையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement