• May 19 2024

தடையை மீறி குழந்தை பெற்ற நயன் மற்றும் விக்கியை விசாரணை செய்ய விஷேட குழு நியமனம்- சூடு பிடிக்கும் விவகாரம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இந்த வருடம் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.திருமணம் முடிந்ததை அடுத்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்த இவர்கள் தற்பொழுது படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகின்றனர். 

இந்த நிலையில் இவர்களுக்கு சமீபத்தில் இரட்டைக் குழந்தை பிறந்தது.வாடகைத் தாய் மூலம் இந்த குழந்தையை அவர்கள் பெற்றெடுத்தனர்.அது எப்படி திருமணமான நான்கே மாதத்தில் குழந்தை பெற்றெடுக்க முடியும் என ஏராளமானோர் கேள்வி எழுப்பினர். அதுமட்டுமின்றி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள இந்தியாவில் தடை உள்ள போதிலும் அதை மீறி அவர்கள் குழந்தை பெற்றுக்கொண்டதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.


ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாது நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தமது குழந்தைகளுடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர். மறுபுறம் இந்த விவகாரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் சுகாதாரத்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூறி இருந்தார்.

இந்நிலையில், இன்று அவர் அளித்துள்ள பேட்டியில், வாடகைத் தாய் விவகாரம் குறித்து விசாரணை நடத்த சுகாதாரத் துறை இணை இயக்குநர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த பின்னர் தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.


அதேபோல் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனிடம் விசாரணை நடத்தப்படுமா என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர், தேவைப்பட்டால் அவர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருவதையும் காணலாம்.

Advertisement

Advertisement