• Jan 18 2025

இந்த வாரம் வெளியேறவுள்ள போட்டியாளர் இவர் தான்..பிக்போஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

பிக்போஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி மிகவும் பரபரப்புடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீசன் பெரிதும் பேசப்படாமல் உள்ளது ஏனெனில் இந்த சீசனை நடத்தும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கூட ஒரு காரணமாக இருக்கலாம் என செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன என்னவாக இருந்தாலும் உலகநாயகனுக்கு இருந்த கூட்டம் இவருக்கு இல்லை என்றே சொல்லலாம்.


அந்தவகையில் கடந்த வாரங்களில் ரவீந்திரர்,ஆர்னவ்,தர்ஷா,சுனிதா ஆகியோர் வெளியாகியிருந்தனர் அதனை தொடர்ந்து போன வாரம் வைல்ட் கார்ட்டில் 6 பேர் உள்ளே சென்றிருந்தனர் அவர்களது செயற்பாடுகள் அதிகம் வரவேற்கப்படவில்லை இதில் 5 பேர் எலிமினேஷன் ஆகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இந்த வாரம் பிக்போஸ் தமிழ் சீசன் 8 வீட்டை  விட்டு கென்டென்ட் கிரியேட் பண்ணும்  வைல்ட் கார்ட் போட்டியாளர் றியா வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement