• Apr 03 2025

17 லட்சத்துடன் ஓட்டமெடுக்க தயாரான சௌந்தர்யா.. வாக்குமூலம் கொடுத்த வீடியோ படுவைரல்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் முக்கிய போட்டியாளராக திகழ்ந்து வருபவர் சௌந்தர்யா.  சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் இடம் பெற்ற ஃப்ரீஸ் டாஸ்க்கில் விஷ்ணுவுக்கு லவ் ப்ரொபோஸ் செய்திருந்தார் சௌந்தர்யா.

பிக்பாஸ் வரலாற்றிலேயே இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது இதுதான் முதல் முறை என்று ரசிகர்கள் தமது விமர்சனத்தை முன்வைத்து வந்தார்கள். விஷ்ணு சௌந்தர்யாவுக்கு நல்ல நண்பராகவே காணப்பட்டார். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் அவருக்கு லவ் ப்ரொபோஸ் செய்திருந்தார்   சௌந்தர்யா.

இன்னொரு பக்கம் தற்போது பிக்பாஸ் வீட்டில் சௌந்தர்யா பிஆர் வைத்திருப்பதை ஓபன் ஆகவே சொல்லியுள்ளார். இதைக் கேட்ட சக போட்டியாளர்கள் சௌந்தர்யா மீது தமது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.


இந்த நிலையில், சௌந்தர்யா பேசிய மற்றொரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் தான் பணபெட்டியை எடுக்கும் நோக்கில் இருப்பதாக சகப் போட்டியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, பிக்பாஸ் வீட்டில் பணப் பெட்டியை வைத்த பிறகு அதில் 17 லட்சம் வரும் வரை காத்திருந்து பணத்தை எடுப்பதற்காக திட்டம் போட்டுள்ளாராம் சௌந்தர்யா.


இதன்போது விஷால் எனக்கு எவ்வளவு தருவாய் என்று கேட்க, நான் ஒரு ரூபாய் கூட தர மாட்டேன் என்று சௌந்தர்யா சொல்லுகின்றார். ஆனால் விஷால் நான் பணப் பெட்டியை  எடுத்தால் உனக்கு ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன் என்று சொல்லுகின்றா.ர் தற்போது இவர்கள் பேசிய வீடியோ வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement