தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக காணப்படும் பூனம் கவுர், தமிழில் வெளியான நெஞ்சிருக்கும் வரை, வெடி, பயணம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தார். இதில் நெஞ்சிருக்கும் வரை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
அதன் பின்பு இவர் சினிமாக்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக காணப்படுவார். சமீபத்தில் பல இயக்குநர் ஒருவர் நடிகை ஒருவரை கர்ப்பம் ஆக்கி அவருடைய வாழ்க்கையை நாசம் செய்ததாக அதிரடியாக குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குநர் திரிவிக்ரம் சீனிவாஸ், பவர் ஸ்டார், பவன் கல்யாண் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார். இது தொடர்பில் பல பேட்டிகளிலும் பேசி உள்ளார்.
மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிராக நடைபெற்ற துன்புறுத்தல்கள் அத்தனையையும் அம்பலப்படுத்திய ஹேமா கமிஷன் அறிக்கையை தொடர்ந்து, பல நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த உடல் ரீதியான அனுபவங்களையும், அத்துமீறல்களையும் வெளிப்படுத்தி வருகின்றார்கள்.
இந்த நிலையில், சமீபத்தில் நடிகை பூனம் கபூர் அளித்த புகார் தொடர்பில் இதுவரையில் திரைப்பட கலைஞர்கள் சங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தனது குற்றச்சாட்டை மீண்டும் வைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட பதிவில், திரிவிக்ரம் மீது திரைப்படக் கலைஞர்கள் சங்கத்திடம் நான் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது எனது கேரியரை அளித்தது மட்டுமில்லாமல் எனது ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் கடுமையாக பாதித்துள்ளது.
இதற்கு நடவடிக்கை எடுக்காமல் அவரை ஆதரிப்பதை பார்க்கும்போது மன வேதனை அளிக்கின்றது.. என்று பதிவிட்டுள்ளார். தற்போது அவருடைய பதிவு வைரலாகி வருகின்றது.
Listen News!